லாட்ஜ் அறையில் பிணமாக கிடந்த மேலாளர்- காவல்துறையினர் விசாரணை
காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 78). இவர் நாகர்கோவில் வடிவீஸ்வரன் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். லாட்ஜிலேயே தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், நேற்று காலை அவரை திடீரென காணவில்லை. லாட்ஜ் உரிமையாளர் சுப்பிரமணியம் அவரை பலமுறை தொடர்பு கொண்டார். ஆனால் செல்போனை எடுக்கவில்லை. லாட்ஜில் உள்ள அறைகளை சோதனை செய்து பார்த்தபோது ஒரு அறையில் கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
புகாரின் பேரில், கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த கருப்பசாமி, லாட்ஜில் உள்ள அறையில் கழிவறைக் சென்று விட்டு திரும்பியபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.