உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம் - புத்தாடை வழங்கிய திமுகவினர்!
புத்தாடை, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்;
Update: 2023-11-28 06:21 GMT
உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு புத்தாடை வழங்கிய திமுகவினர்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஒன்றிய, நகர திமுக சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட துணைச் செயலாளரும், திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவருமான சேங்கைமாறன் தலைமை வகித்தார். இவ்விழாவில் இனிப்புகள் வழங்கி, புத்தாடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் துணைத் தலைவர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்