கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மண்டல பூஜை
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த மண்டல பூஜை விழாவில் அம்மன் ஆண்டாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் .;
Update: 2024-03-19 08:51 GMT
கன்னிகா பரமேஸ்வரி அம்மன்
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து மண்டல பூஜை நடந்தது. நேற்று முன்தினம் நடந்த 24ம் நாள் மண்டல பூஜையில், ஆர்ய வைசிய சங்கமும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆர்ய வைசிய சமூகத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அம்மனுக்கு ஆண்டாள் அலங்காரம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, வினாடி வினா போட்டி நடத்தி, கமிட்டி தலைவர் அரவிந்தன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். நிர்வாக தலைவர் ரவீந்திரன், ராமதாஸ் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.