காஞ்சிபுரம் கோவில்களில் மண்டலாபிஷேகம் நிறைவு

அனுஜ்ஞா கணபதி, ஆதிசங்கரர் பகவத் பாதாள் சன்னிதி கோவில்களில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா பெற்றது.

Update: 2024-06-23 11:11 GMT

காஞ்சிபுரம் கோவில்களில் மண்டலாபிஷேகம் நிறைவு

காஞ்சிபுரம் சங்கர மட வளாகத்தில் அனுஜ்ஞா கணபதி, ஆதிசங்கரர் பகவத் பாதாள் சன்னிதி, சுரேஷ் வராச்சாரியார் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்த மூன்று சன்னிதிகளையும் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மூன்று சன்னிதியிலும் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டு, மே 3ம் தேதி மூன்று சன்னிதிகளுக்கும், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.

தொடர்ந்து, தினமும் மூன்று கோவில்களிலும் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. மேலும், இக்கோவில்களில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நேற்று நடந்தது. இதில், சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. அனுஜ்ஞா கணபதி, ஆதிசங்கரர் பகவத் பாதாள் சன்னிதி, சுரேஷ் வராச்சாரியார் சன்னிதிகளில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சிறப்பு அபிஷேகம், ஆராதனை, துாப தீபாராதனை செய்தார்.

Tags:    

Similar News