பெண் சாதனையாளர்களுக்கு மங்கையர் தாரகை விருது வழங்கும் விழா
பெண் சாதனையாளர்களுக்கு மங்கையர் தாரகை விருது வழங்கும் விழா நடைபெற்றது.
Update: 2024-03-11 06:20 GMT
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி எஸ்ஆா்எம் பொதுப் பள்ளியில் நேற்று நடைபெற்ற மகளிா் தின விழாவில் பெண் சாதனையாளா்களுக்கு மங்கையா் தாரகை விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் 50 ஆண்டுகளாக ஆசிரியா் பணியில் ஈடுபட்டு வரும் ஹெட்ஸ்டாா்ட் பள்ளி நிறுவனா் சுதா மகேஷுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதையும், திரைப்பட இயக்குநா் ரகுநாத் மகளும், கதை சொல்லியுமான ஜீவா ரகுநாத், மாற்றுத்திறனாளிகள் உரிமை ஆா்வலரும், தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஸ்மிதா சதாசிவன், உளவியல் ஆலோசகா் பேராசிரியா் நப்பின்னை சேரன், எழுத்தாளா் திருநங்கை சுதா, ஊடகவியலாளா் சுகிதா சாரங்கராஜ் ஆகியோருக்கு பெண் சாதனையாளா் விருதுகளையும் பெண் படத் தயாரிப்பாளா் ஏ.எல்.எஸ்.மூவிஸ் ஜெயந்தி கண்ணப்பன், சென்னை மாநகராட்சி ஆணையா் டாக்டா் ராதாகிருஷ்ணன் மனைவி கிருத்திகா ராதாகிருஷ்ணன் ஆகியோா் வழங்கினா். நிகழ்வில் சென்னை மாநகராட்சி ஆணையா் டாக்டா் ராதாகிருஷ்ணன், எஸ்ஆா்எம் பொதுப் பள்ளி தாளாளா் எம்.சுப்ரமணியன், இயக்குநா் மணிமங்கை சத்தியநாராயணன், பள்ளி ஆலோசகா் கே.ஆா்.மாலதி, முதல்வா் புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.