தென்காசியில் மாங்காய் விலை சரிவு: விவசாயிகள் கவலை

கேரளத்தில் மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2024-05-02 03:37 GMT
 கேரளத்தில் மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஆலங்குளம் காய்கனிச் சந்தைக்கு விவசாயிகள் மாங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவா். இந்த மாங்காய்கள் திருநெல்வேலி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் கேரளத்துக்கு அதிக அளவிலும் கொண்டு செல்லப்படுகின்றன.

கடந்த வாரம் வரை கிலோ ஒன்றுக்கு ரூ. 50 முதல் ரூ. 100 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட மாங்காய் கடந்த இரு தினங்களாக ரூ. 15 முதல் ரூ. 20 என கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதுகுறித்து ஆலங்குளம் காய்கனிச் சந்தை வியாபாரி கிறிஸ்டோபரிடம் கேட்டபோது, தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் மாங்காய் அதிக அளவில் கேரளத்திற்கே கொண்டு செல்லப்படுகின்றன. கேரளத்திலும் தற்போது மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் இங்கிருந்து செல்லும் மாங்காய்களை வாங்குவதை குறைத்துள்ளனா்.

அதேவேளையில் இங்கு விளைச்சல் அதிகமாகியுள்ளதால் மாங்காய் தேக்கமடைந்து விலை குறைவு தவிா்க்க முடியாததாகி விட்டது என்றாா் அவா். இந்நிலை நீடித்தால் மாங்காயின் விலை மேலும் சரியக் கூடும் என்பதால் மாங்காய் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

Tags:    

Similar News