சிவகிரியில் களைகட்ட தொடங்கிய மாம்பழம் சீசன் வியாபாரிகள் மகிழ்ச்சி
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி வட்டாரத்தில் மாம்பழ சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.
Update: 2024-05-05 04:46 GMT
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி வட்டாரத்தில் மாம்பழ சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இதனால் செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதி விளைச்சல் அதிகமாக உள்ளதால் மாமர தோட்டங்களில் இருந்து பறிக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனைக்கு வந்து குவிகின்றன.
பங்கனப்பள்ளி, கிளி மூக்கு, பஞ்சவர்ணம் உள்ளிட்ட மாம்பழங்கள் பழக்கடைகளிலும் சாலை ஓர கடைகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இன்று மாம்பழம் ஒரு கிலோ குறைந்தபட்சம் 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மாம்பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.