மருது பாண்டியர்களுக்கு மணிமண்டபம்: கே.டி.ராஜேந்திர பாலாஜி
மருது பாண்டியர்கள் சொந்த ஊரான நரிக்குடி என்.முக்குலத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
By : King 24x7 Website
Update: 2023-10-27 10:38 GMT
சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர் மருது பாண்டியர்களின் 222 வது குருபூஜை விழா இன்று தமிழகம் முழுவதும் அனுசரித்துக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மறையூர் கிராமத்தில் உள்ள மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்த மருது சகோதரர்கள் சின்னம் பொறித்த கொடியினை ஏற்றி வைத்து அன்னதானத்தை துவக்கி வைத்தார். மேலும் மருது பாண்டியர்கள் பிறந்த ஊரான நரிக்குடி என்.முக்குளத்தில் மற்றும் பெரிய மருதுபாண்டியர்| அழகு மீனாட்சி நாச்சியார் திருக்கோயிலில் மருது பாண்டியர்களின் வாரிசு எஸ் எஸ்தாரர்கள் சார்பில் கொண்டாடபட்ட நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்கு வாரிசுதாரர்கள் சார்பில் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. சிவகங்கை சீமையை ஆண்ட தியாகச் செம்மல்கள் வீரத்தின் விளைநிலம் மருது பாண்டியர்களின் 222 வது குருபூஜை இன்று நடைபெறுகிறது. அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக தமிழக முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவுக்கிணங்க அவர் மருது பாண்டியர்கள் பிறந்த ஊரான நரிக்குடி அருகே உள்ள என்.முக்குலம் பகுதியில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். இப்பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருது சகோதரர்கள் பிறந்த ஊரில் மணிமண்டபம் கட்ட வேண்டும், அரசு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை உள்ளது. சின்ன மருதுபாண்டியர், பெரிய மருது பாண்டியர் தியாக வரலாற்றை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நன்கு அறிவார். மீண்டும் அவர் முதலமைச்சராக வந்த பிறகு இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும். எடப்பாடியாரின் ஆட்சியில் தான் தியாயிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அவர் ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு கோரிக்கை எல்லாம் நிறைவேற்றப்படும் என்று, மாவீரர் மருது பாண்டியர்களின் தியாகங்கள் போற்றப்பட வேண்டும், என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார் .