சுசீந்திரத்தில் மஞ்சப்பை விழிப்புணர்வு முகாம் 

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயில் நுழைவாயில் பகுதியில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-07-03 14:09 GMT

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயில் நுழைவாயில் பகுதியில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.


கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயில் நுழைவாயில் பகுதியில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் இன்று (03.07.2024) தொடங்கி வைத்து தெரிவிக்கையில்-      கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காக காய்கறி சந்தைகள், மீன்சந்தைகள்,  நீர்நிலைகள்,  திருக்கோவில்களில் உள்ள குளங்கள் போன்றவைகளில்  மாசு கட்டுபாட்டு வாரியத்தின் சார்பில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியினை பொதுமக்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் உள்ளிட்டவைகளில் பயன்படுத்தமால், மஞ்சப்பையை அனைவரும் பயன்படுத்த வேண்டும்  என்ற விழிப்புணர்வினை இன்று சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி  திருக்கோவில் முகப்பு வாசலின் முன் நெகிழி பையில்லா கன்னியாகுமரி மாவட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகை பலகையினை திறந்து வைத்து, பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மஞ்சப்பை வழங்கப்பட்டது.    

 என கலெக்டர்  தெரிவித்தார்கள். தொடர்ந்து சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களிடையே சர்வதேச நெகிழி பையில்லா தினத்தை முன்னிட்டு ஒரு முறை தூக்கி எறியும் பிளாஸ்டிக்   (நெகிழி)- க்கு மாற்றாக மஞ்சப்பையை பயன்படுத்துவதன் பயன்கள் குறித்து விளக்கி கூறினார்கள்.   மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்  பள்ளி  மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளையும், மஞ்சப்பைகளை பயன்படுத்துவதன் அவசியம் குறித்த உறுதிமொழியினை எடுத்துக்கொண்டு,  மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.       நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, செயல் அலுவலர், பணியாளர்கள், மாணவ மாணவியர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News