செஞ்சி அருகே அரசுபள்ளியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழுப்புரம் மாவட்டம், கோட்டப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி யில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.;
Update: 2024-01-22 05:10 GMT
மஞ்சள்ப்பை விழிப்புணர்வு
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே கோட்டப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி யில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் குமரவேல் வரவேற்றார். தாசில்தார் முகமது அலி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பைகளை வழங்கி, பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் அவலூர்பேட்டை வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன், கிராம நிர்வாக அலுவலர்கள் காளிதாஸ், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.