கொடைக்கானலில் இங்கு செல்ல தடை

மன்னவனூர் சூழல் சுற்றுலா தலத்திற்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-04 14:53 GMT

சுற்றுலா பயணிகள் செல்ல தடை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல் மலைக்கிராமங்களான பூம்பாறை மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட மலை கிராம சாலைகளிலும் அதனை ஒட்டிய வனப்பகுதிகளிலும், வருவாய் நிலங்களிலும் கடந்த 10 நாட்களாக காட்டு தீ பரவி நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தீ எரிந்து வந்தது.

இந்நிலையில் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு நலன் கருதியும், எரிந்து வந்த தீயை கட்டுப்படுத்த தண்ணீர் வாகனங்கள் மற்றும் தீயை அணைக்கும் உபகரணங்கள் தீ பற்றி எரிந்த பகுதிக்கு கொண்டு சென்றதாலும், 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டதாலும், காட்டு தீ எரிந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படா வண்ணம் கடந்த 3 தினங்களாக மேல் மலை கிராமங்களுக்கு சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள்,கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது.

இந்நிலையில் நேற்று 80 சதவிகிதம் காட்டு தீ கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து இன்று மேல் மலை கிராமங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்து, மேலும் மன்னவனூர் கிராமத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சூழல் சுற்றுலா தலத்திற்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை நீடிப்பதாக மன்னவனூர் வனச்சரகர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News