திருப்பூர் கல்லாங்காடு பாறைகுழியில் 45 வயது அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பு
திருப்பூர் வெள்ளியங்காடு அடுத்த கல்லாங்காடு பாறைகுழியில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பு. உடலை கைப்பற்றி கொலையா தற்கொலையா என வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-03-11 11:21 GMT
ஆண் சடலம் மிதப்பு
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளியங்காடு அடுத்த கல்லாங்காடு பகுதியில் பாறைகுழி உள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற சிலர் அந்த பாறைகுழியில் இறந்த நிலையில் சடலம் மிதப்பதை பார்த்துள்ளனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியோடு பாறைகுழியில் இருந்த சடலத்தை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில் பாறைகுழியில் மிதந்தது 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் என்றும், இறந்து இரண்டு மூன்று நாட்கள் ஆகி இருக்கலாம் என்றும் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மது போதையில் கீழே விழுந்து இறந்துள்ளாரா? என்பது குறித்து தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவிலேயே இது தற்கொலையா? கொலையா? என்பது குறித்து தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளனர்.