இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி மராத்தான் போட்டி

குழித்துறையில் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி மராத்தான் போட்டியை நகர்மன்ற தலைவர் பொன்.ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார்.

Update: 2024-06-16 14:03 GMT

குழித்துறையில் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி மராத்தான் போட்டியை நகர்மன்ற தலைவர் பொன்.ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார்.




புவி வெப்பம் மயமாகுதலை தவிர்த்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், இயற்கையை பாதுகாத்தல், மரம் வளர்த்தல் மற்றும் போதை விழிப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்தி மார்த்தண்டத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் மராத்தான் போட்டி நடை பெற்றது. இந்த போட்டி மார்த்தாண்டம் வெட்டுவெந்நி ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியது.போட்டியை குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார்.மராத்தான்போட்டியானது வெட்டுவெந்நி, மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. சர்ச், மீண்டும் வெட்டு வெந்நி, காப்புக்காடு, முஞ்சிறை,காப்புக்காடு வழியாக குழித்துறை நகராட்சி முன்பு நிறைவடைந்தது. நிகழ்ச்சிக்கு தலைவர் எட்வர்டு ஸ்மித் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜேஷ் சேகர் முன்னிலை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முத்து, உதயரேகா, மற்றும் சிகான் கராத்தே ஆனந்தலால் ராஜூ, தொழிலதிபர் நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
Tags:    

Similar News