எடப்பாடியில் மாரத்தான் ஓட்டபந்தயம்

சுற்றுப்புற சூழல் பாதுகாத்தல் மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகளிடையேயான மாரத்தான் எடப்பாடியில் நடைபெற்றது.

Update: 2023-10-22 13:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம்  எடப்பாடி, சங்ககிரி கட்டிட கட்டுமான பொருட்கள்  விநியோகிக்கும் லாரி மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் சங்கமும், எம்.எம்.ஸ்போர்ட்ஸ் அகாடமியும் இணைந்து மாணவ மாணவிகளிடையேயான மாரத்தான் ஓட்ட போட்டி நடத்தியது. இப்போட்டியினை சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கந்தசாமி துவக்கி வைத்தார்.

இப்போட்டி 5 கிலோ மீட்டர், 2 கிலோமீட்டர், ஒரு கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைப்பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் சரக காவல்துறை துணை தலைவர் ராஜேஸ்வரி ஐபிஎஸ் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். அப்போது  எடப்பாடி, சங்ககிரி கட்டிட கட்டுமான விநியோகிக்கும் சங்கத்தின் செயலாளர் ஆனந்தன், எம்.எம்.ஸ்போர்ட்ஸ் சுரேஷ் உட்பட மாணவ மாணவிகள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News