காவல் துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாலை மறியல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து நித்திரவிளையில் சாலை மறியல்

Update: 2024-03-14 06:50 GMT

சாலை மறியல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஆர். செல்லசுவாமி மீதும், முஞ்சிறை வட்டாரக்குழு உறுப்பினர் அனீஷ் மீதும் தாக்குதல் நடத்திய நித்திரவிளை காவல் ஆய்வாளர் இக்னோஸ் குமார் என்பவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், சட்டத்திற்கு புறம்பாக தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக அவர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திட வேண்டுமெனவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நித்திரவிளை ஜங்சனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகன் தலைமை தாங்கினார். முஞ்சிறை வட்டார செயலாளர் அலெக்ஸ்,, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்லீமாறோஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின், மாநில தலைவர்கள் கனகராஜ், நூர்முகமது ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.நிகழ்சியில் தங்கமோகன், அந்தோணி, ஸ்டாலின்தாஸ், அண்ணாதுரை, உஷா, வட்டார செயலாளர்கள் சாந்தகுமார், தங்கமணி, புஸ்பதாஸ், அஜித்குமார், சசிகுமார், சுஜா, ரெஜி, சர்தார்ஷா உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News