மாசி மகத் திருவிழா - 7-ம் மண்டகப்படி விழா
அன்னவாசல் சிவன் கோவில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு 7-ம் மண்டகப்படி விழா நடைபெற்றது.;
Update: 2024-02-22 07:17 GMT
7-ம் மண்டகப்படி விழா
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் சிவன் கோவில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு இன்று அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளால் நடத்தப்படும் மாசி மகத் திருவிழா 7-ம் மண்டகப்படி விழா நடந்தது. இதில் அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் உடனுறை தர்மசம்வர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைப்பெற்றது.இதில் ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.