அம்மனுக்கு மாசி பொங்கல் சிறப்பு அலங்காரம்
சிவகாசி சக்தி அம்மன் கோயிலில் மாசி பொங்கலையோட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Update: 2024-02-29 09:43 GMT
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மாசி தெருக்கட்டு பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகாசியிலுள்ளி விக்கி முனி தெரு பகுதியில் அமைந்துள்ள சக்தி அம்மன் கோவிலில், மாசி தெருக்கட்டு பொங்கல் விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக சக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து,சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தெருக்கட்டு பொங்கலை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு விழா குழுவினர் பரிசுகள் வழங்கினர்.