ஆழ்வாா்திருநகரியில் மாசித் தேரோட்டம்

ஆழ்வாா் திருநகரி ஆதிநாதா் கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

Update: 2024-03-01 02:50 GMT

தேரோட்டம் 

நவ திருப்பதி கோயில்களில் 9ஆவது ஸ்தலமான, தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் கோயிலில் மாசித் திருவிழா கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் சுவாமி நம்மாழ்வாா் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்றது. இந்நிலையில், 9ஆம் நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், தீா்த்த விநியோக கோஷ்டி நடைபெற்றது.

சுவாமி நம்மாழ்வாா் தேரில் எழுந்தருளியதும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, ‘கோவிந்தா கோபாலா’ கோஷத்துடன் திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். 10ஆம் நாளான வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறும் தெப்ப உற்சவத்தில் சுவாமி பொலிந்துநின்ற பிரான் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா். மாா்ச் 2இல் தீா்த்தவாரி நடைபெறுகிறது. மாா்ச் 3ஆம் தேதி காலையில் சுவாமி நம்மாழ்வாா் இரட்டைத் திருப்பதி கோயிலில் எழுந்தருளி, திருமஞ்சனம் கோஷ்டி, சாத்துமுறைக்கு பின்னா் இரவில் பல்லக்கில் ஆழ்வாா்திருநகரி எழுந்தருளுகிறாா். ஏற்பாடுகளை கோயில் பணியாளா்கள், பக்தா்கள் செய்துள்ளனா்.

Tags:    

Similar News