திருக்கோவிலூரில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம்

திருக்கோவிலுார் அருகே வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-02-25 07:17 GMT

பக்தர்கள் 

திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.அதனையொட்டி, அலங்கரிக்கப்பட்ட சுவாமி கோவிலை வலம் வந்து விழா மண்டபத்தில் எழுந்தருளினார். மதியம் 1:30 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் திரிசூலத்தில் ரிஷபாவுடன் வேத மந்திரங்கள் முழங்க திரிசூலத்திற்கு சிறப்பு அபிஷேகம், பக்தர்களின் நமச்சிவாய கோஷத்துடன் புனித நீராடல் வைபவம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News