திருப்பூரில் மேதின கொண்டாட்டம்

திருப்பூரில் மே தினத்தை முன்னிட்டு 220 பள்ளி மாணவர்கள் ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்வை செய்தனர்.

Update: 2024-05-01 10:34 GMT

திருப்பூரில் மே தினத்தை முன்னிட்டு உழைப்பாளர் சிலை மாதிரி வரைபடத்தை வரைந்து அதன் மீது நின்று 30 பள்ளிகளை சேர்ந்த 220 பள்ளி மாணவர்கள் ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்வு. திருப்பூர் ஊத்துக்குளி சாலை,  மண்ணறையில்  உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு  எம்.கே. சிலம்பம் அகாடமி சார்பில்  சிவகங்கை,கோவை ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை சேர்ந்த 30 பள்ளிகளில் பயிலும் 220 மாணவர்கள் பங்கேற்று ஒன்றரை மணி நேரம் இடைவிடாதுசிலம்பம் சுற்றும் நோபல் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.இந்த பள்ளி மாணவர்கள்உழைப்பாளர்களின் உழைப்பைப் போற்றும் வகையிலும்மே தின நாளின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையிலும்  உழைப்பாளர் சிலை மாதிரி  வரையப்பட்ட சிலை மீது நின்று  கொண்டு ஒன்றரை மணி நேரம்சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்வை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பினர் அங்கீகரித்து மாணவர்களுக்கு சான்றிதழ், கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

இந்த நோபல் உலக சாதனை நிகழ்வு விழாவில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் விஜயகுமார், கொங்கு வியாபாரிகள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் காட்டன் பி.சக்திவேல், அவைத் தலைவர் எஸ்.சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வி, எம் .கே . சிலம்பம் அகாடமி நிறுவனர் மாஸ்டர் சந்தீப்,தேசிய நடுவர்கள்ஹேமந்குமார், லாவண்யா ஜெயகர்மற்றும் பங்கேற்று உலக சாதனை நிகழ்த்திய  மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக இந்த உலக சாதனை நிகழ்வில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் செவிலியர்கள் மருத்துவ தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு உழைக்கும் கரங்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Tags:    

Similar News