அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா !
தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே மின்வாரியம் அலுவலகம் முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தினம் கொடியேற்று விழா நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-05-02 06:05 GMT
மே தின கொடியேற்று விழா
தர்மபுரி அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே மின்வாரியம் அலுவலகம் முன்பு நேற்று மாலை அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி தலைமையில் மே தின கொடியேற்றி வைத்து சிறப்பு அழைப்பாளர் அம்மா பேரவை செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் நகர கழக செயலாளர் பூக்கடை ரவி போக்குவரத்து கழக மண்டல செயலாளர் லட்சுமணன் மின்சார வாரிய நிர்வாகிகள் முனியப்பன்,சாந்தமூர்த்தி, அன்பழகன், அம்மா வடிவேல், சிங்கராயன்,வடிவேல்,ரஞ்சித்,ஜீவா பாலாஜி, மனோகரன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மே தினம் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.