கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்
கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமாகியுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-18 14:49 GMT
கோப்பு படம்
திருச்சி திருவெறும்பூர் பிஹெச்எல் டவுன்ஷிப் பகுதி சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகள் ரோஜா (வயது 23) இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்சிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது உறவினர் கிருஷ்ணராஜ் என்பவர் கேகே நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரோஜாவை தேடி வருகின்றனர்