திருச்சியில் தத்தெடுக்கப்பட்ட இளம் பெண் மாயம்
திருச்சியில் மருந்து கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற இளம் பெண் மாயம். போலீசார் விசாரணை.;
By : King 24x7 Angel
Update: 2024-02-17 11:06 GMT
திருச்சியில் தத்தெடுக்கப்பட்ட இளம் பெண் மாயம்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் கங்கா (19) என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்தார். தற்போது கங்கா கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் ஊருக்கு வந்த அவர் அருகில் உள்ள மருந்து கடைக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ராமச்சந்திரன் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.