மேட்டூரில் மயான கொள்ளை திருவிழா

சேலம் மாவட்டம் மேட்டூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது.

Update: 2024-03-11 04:42 GMT

 மயான கொள்ளை திருவிழா 

மேட்டூர் அருகே விருதாசம் பட்ட கரிகாலன் நகர் பகுதியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை செல்வகணபதி, பாலமுருகன், ஜம்புகேஸ்வரர் சுவாமிகளுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னர் அடுத்த நாள் சக்தி அழைத்தல், சக்தி கரகம், அக்னிகரகம் , அலகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அமாவாசையை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் அம்மன் வேடம் அணிந்து வந்த பூசாரி ஆடு, கோழிகளை வாயில் கடித்து பக்தர்களை பரவசபடுத்தினார். பின்னர் மயானத்தில் நீண்ட வரிசையில்   தரையில் படுத்திருந்த  100-கணக்கான  பெண்களை அம்மன் தாண்டி சென்று ஆசி வழங்கினார்.அம்மன் வேடமணிந்தவர் பெண்கைளை தாண்டி சென்றால் குழந்தை பாக்கியம் உண்டாகும், தீராத நோய் தீரும், திருமண தடை நீங்கும் என பக்தர்கள் தெரிவித்தனர். திருவிழாவில் கலந்து கொண்ட பகதர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News