மயிலாடுதுறை கூடுதல் ஆட்சியர் பொறுப்பேற்பு
மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சித்துறைக்கான மாவட்ட கூடுதல் ஆட்சியராக மு.ஷபீர் ஆலம் ஐஏஎஸ் பொறுப்பெற்றார்;
Update: 2024-01-03 02:01 GMT
மயிலாடுதுறை கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி துறையில் பொறுப்பேற்பு
சமீபத்தில் தமிழ்நாடு அரசு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றமும் புதிய பதவியேற்பு அறிவிப்பும் கொடுத்தது. அதில் மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைக்கான மாவட்ட கூடுதல் ஆட்சியராக மு.ஷபீர் ஆலம் ஐஏஎஸ் நியமனமும் அறிவிக்கப்பட்டது. அவர் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் பொறுப்பேற்றுக் கொண்டார். 2020 ஆண்டு ஐஏஎஸ் தேர்வு பெற்றவர், மத்திய அரசு அமைச்சகப் பணியில் இருந்தவர், தமிழகத்தில் சேலத்தில் உதவி ஆட்சியராக பயிற்சி பெற்றவர். திருநெல்வேலி சேரன்மாதேவியிலும் பணியாற்றியவர்.