மயிலாடுதுறை : மயிலாடுதுறை காவல்துறை மீது சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு..!

தமிழ்நாடு அரசு உயர்த்தி அறிவித்த பெட்ரோல் படியை கடந்த 3 மாதகாலமாக வழங்க மயிலாடுதுறை காவல்துறை அலுவலகம் மறுத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Update: 2023-10-27 17:02 GMT
அரசாணையை செயல்படுத்தாத மயிலாடுதுறை காவல்துறை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

            தமிழ்நாட்டில் காவல்நிலையங்களில் பணிபுரியும் காவலர்முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்வரை மாதத்திற்கு 5 லிட்டர் பெட்ரோல் படியாக  370 ரூபாய்  வழங்கப்பட்டு வந்தது.             

பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதை கருத்தில்கொண்டு தமிழ்நாடு முதல்வர் கடந்த 6வது மாதம் முதல் மாதந்தோறும் 5 லிட்டர் பெட்ரோலுக்கு  .515 ரூபாய் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அரசு ஆணை எண்.727 தேதி 28.6.23 ஆகும்.  கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து முன் தேதியிட்டு வழங்கவேண்டும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டிருந்தது, இதன்மூலம் தமிழகம் முழுவதும் 73,355 போலீசார் பயன்பெறுவார்கள் என  தெரிவிக்கப்பட்டிருந்தது,   

மாநிலத்தின் அனைத்து மாவட்டக் காவல்துறையினரும் இதை செயல்படுத்திவரும்நிலையில் மயிலாடுதுறை மாவட்டக் காவல் அலுவலகத்தில்  பணியாற்றும் நபர்கள் இதை வழங்க மறுத்துவருகின்றனர்.  உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News