மயிலாடுதுறை மாணவர் 3ம் இடம்
மயிலாடுதுறை சில்வர் ஜூப்ளி மெட்ரிக் மேனிலைபள்ளியில் அறிவியல் பிரிவு மாணவர் ஆதித்யா 590 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ் டூ மாணவர்கள் பொது தேர்வில் 92.38 சதவீதம் பெற்று மாநிலத்தின் 32 வது இடத்தை பெற்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி சாய் கண்ணம்மை கலைபாடப் பிரிவில் 595 மதிப்பெண்களைகளைப் பெற்றார். அதேபோன்று குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ரவிச்சந்திரிகாவும் கலைப்பாடப் பிரிவு. சில்வர் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆதித்யா என்ற மாணவர் அறிவியல் பாடத்திட்டத்தில் 590 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடம் பிடித்தார்.
தமிழ் 98 ஆங்கிலம் 98 பௌதிகம் 100 கணினி 100 ரசாயனம் 95 கணிதம் 99 ஆக மொத்தம் 590 எடுத்துள்ளார். மூன்றாம் இடம் பிடித்த ஆதித்யா என்ற மாணவரை பள்ளி தலைவர் மோகன், பள்ளியின் தாளாளர் வெற்றி, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.