மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதம்

ரெயில் பெட்டி இணைக்கும் பணியால் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 3 மணிநேரம் தாமதாக வந்ததால் பயணிகள் சிரமத்திற்குள்ளானார்கள்.

Update: 2024-03-25 03:40 GMT

பைல் படம் 

சேலத்தில் இருந்து நாமக்கல், கரூர், திருச்சி வழியாக மயிலா டுதுறை வரை செல்லும் வண்டி எண்: 16812 மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் சேலத்தில் பெட்டிகளை இணைக்கும் பணியால் மதியம் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் 3 மணி நேரம் தாமதமாக மாலை 5.32 மணிக்கு புறப்பட்டது. இந்த ரெயில் திருச்சிக்கு வழக்கமாக மாலை 5.55 மணிக்கு வந்து செல்லும். ஆனால் இந்த ரெயில் 3 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக இரவு 9.15 மணிக்கு திருச்சிக்கு வந்தது. இதையடுத்து இரவு 9.45 மணிக்கு மயிலாடுதுறைக்கு சென் றைடைய வேண்டிய ரெயில் இரவு 12.15 மணிக்கு சென்றடைந்தது. இதனால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
Tags:    

Similar News