தலைமை ஆசிரியை கண்டித்த எம்.எல்.ஏ அன்பழகன்
தரங்கம்பாடி அருகே பள்ளிக் கழிப்பறை சுத்தமாக இல்லாததால் தலைமை ஆசிரியரை சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் கண்டித்து அறிவுரை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடம் கட்டும் பணியை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் அன்பழகன் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்த குழுவினர் பின் பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினர்.
பள்ளி கழிப்பறையை ஆய்வு செய்தபோது கழிப்பறை சுத்தமாக இல்லாததாலும் குப்பையாக காணப்பட்டதனாலும் ஆத்திரமடைந்த சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் பள்ளி தலைமை ஆசிரியரை அழைத்து. உங்கள் வீடாக இருந்தால் இப்படி வைத்திருப்பீர்களா தவறு இனிமேல் சரி செய்து கொள்ளுங்கள் இதற்காக நாங்கள் ஒன்றும் தூக்கு தண்டனை கொடுக்கப் போவதில்லை வேண்டுகோள் கொடுக்கின்றோம். இனிமேல் இப்படி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கினார்.
மேலும் இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவைச் சார்ந்த திருத்தணி, மயிலம், ஆரணி,எழும்பூர், உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்