பாமக வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்த 110 வயது முதியவர்

மயிலாடுதுறை பாமக வேட்பாளரை 110 வயது முதியவர் புன்னகையோடு வாழ்த்திய நிகழ்வு கட்சி நிர்வாகிகளை வியப்பில் ஆழ்த்தியது.;

Update: 2024-03-27 02:42 GMT

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக ம.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். இன்று  கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களோடு சேர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். கடந்த இரண்டு நாட்களாக கூட்டணி கட்சித் தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் நாட்டாமைகளை சந்தித்து மரியாதை செய்து வாழ்த்து பெற்று வருகிறார்

Advertisement

அந்த வகையில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆடுதுறை அருகே மருத்துவகுடி தட்டார தெரு பகுதியில் உள்ள 110 வயது முதியவர் அப்பு பிள்ளை என்பவரது வீட்டிற்கு சென்று அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார் அப்போது 110 வயதிலும் நினைவு மாறாமல் வேட்பாளரை வரவேற்று ஸ்டாலின் நிக்கிறியா அப்ப வெற்றி மாம்பழம் வெற்றி மாம்பழம் வெற்றி என உணர்ச்சி மிகுதியோடு புன்னகைத் தவழ வேட்பாளரை வாழ்த்திய முதியவரின் இச்செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 110 வயதிலும் வேட்பாளரோடு புன்னகைதவழ பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட முதியவர் இச்செயல் வேட்பாளர் மட்டும் அல்ல வேட்பாளரோடு இணைந்து வந்த நிர்வாகிகளுக்கும் என்றும் நினைவில் இருக்கும்.

Tags:    

Similar News