திருப்பூரில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கிய மேயர்
திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பவுன் குமார்ஜிகிரியப்பனவர் முன்னிலையில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை மற்றும் காலணிகளை வழங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-13 09:49 GMT
சீருடை வழங்கிய மேயர்
திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர்பவன்குமார்ஜிகிரியப்பனர் முன்னிலையில் திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 1 முதல் 4 வரை உள்ள பகுதிகளில் பணிபுரியும் 611 மாநகராட்சி நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு 2023 -24 ஆம் ஆண்டிற்கு கோஆப் டெக்ஸ் திருப்பூர் நிறுவனத்திலிருந்து ரூ. 14.34 லட்சம் மதிப்பீட்டில் சீருடைகள் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் திருப்பூர் நிறுவனத்திடம் ரூ. 2.20 லட்சம் மதிப்பீட்டில் காலணிகள் வாங்கப்பட்டு தூய்மை பணியாளருக்கு வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர்கள் பத்மநாபன், உமா மகேஸ்வரி, கோவிந்தராஜ், துணை ஆணையாளர்கள் சுந்தர்ராஜ், சுல்தானா, உதவி ஆணையாளர் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.