திருச்செந்தூர் சாலையில் பூங்கா பணியை மேயர் ஆய்வு

தூத்துக்குடி அடுத்துள்ள முத்தையாபுரம் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதசாரிகள் பூங்கா பணிகள் நிறைவு பெற உள்ள நிலையில் விரைவில் இந்த பூங்கா பயன்பாட்டுக்கு வரும் என தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-27 11:47 GMT

மேயர் ஆய்வு

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் முத்தையாபுரம் ரவுண்டான பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பாதசாரி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் ஓய்வெடுத்துச் செல்லும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஒன்னரை ஏக்கர் பரப்பளவில் சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பேட்டில் பாதயாத்திரையாக செல்லக்கூடிய பக்தர்கள் தங்கி ஓய்வெடுத்து செல்லும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

திருச்செந்தூருக்கு செல்லும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் ஆண் பெண் தனித்தனியாக குளிப்பதற்கு தொட்டிகள் அமைக்கப்பட்டு இருவருக்கும் தனித்தனியாக ஓய்வுறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கழிப்பிட வசதி இரண்டு ஹைமாஸ் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் நிறைவு நிலையில் உள்ளன. இந்த நிலையில் இந்த பூங்காவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் விரைவில் பாதசாரிகளுக்கு பயன்படும் வகையில் இந்த பூங்கா திறக்கப்படும் எனவும் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். மேலும், பாதசாரிகள் வசதிக்காக இந்த பூங்கா அருகில் உள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதிகளிலும் தனியார் பங்களிப்புடன் கம்பி வேலிகள் அமைத்து பாதசாரிகள் அமர்ந்து ஓய்வெடுக்கும் இடமும் அமைக்கப்பட உள்ளது என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார் முத்துவேல் வெற்றி செல்வன் மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் ராஜபாண்டி, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ் ஜாஸ்பர் பிரபாகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News