தூத்துக்குடியில் சாலைப் பணிகள்: மேயர் ஆய்வு

தூத்துக்குடியில் மீனாட்சிபுரம் - எட்டையாபுரம் ரோட்டினை இணைக்கும் பகுதியில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

Update: 2024-06-28 17:09 GMT

மேயர் ஆய்வு 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் பல்வேறு சாலைகள் தரம் உயர்த்தப்பட்டும் அகலப்படுத்தப்பட்டும் வருகின்றது. அதன் ஒரு பகுதியாக மீனாட்சிபுரத்திலிருந்து எட்டையாபுரம் ரோட்டினை இணைக்கும் பகுதியில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் வரும் நாட்களில் அந்தப் பகுதியில் வடிகால் அமைத்து தரப்படும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.

Tags:    

Similar News