தேவர் சிலையை ஆய்வு செய்த மேயர்

கோரிப்பாளையம் தேவர் சிலையை மாநகராட்சி மேயர் ஆயங செய்தார்.

Update: 2023-10-26 08:06 GMT

மேயர் ஆய்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய அவரது முழு உருவ சிலைக்கு அனைத்து கட்சி பிரமுகர்களும் ஜாதிய தலைவர்களும் பொது மக்களும் திரளாக வந்திருந்து 30ஆம் தேதி அன்று மாலை அணிவித்தும் பால்குடம் எடுத்து வந்தும் மரியாதை செய்ய உள்ள நிலையில் காவல்துறையினர் பாதுகாப்பிற்காக சுமார் 5 அடி உயரம் உள்ள தற்காலிக இரும்பு தடுப்பு வேலிகளை அமைத்துள்ள நிலையில், பாதுகாப்பு பணிகள் குறித்தும் முன்னேற்பாடுகள் குறித்தும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி மற்றும் மதுபாலன் ஆகியோர் நேரில் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பொதுமக்கள் எளிதில் வந்து செல்வதற்குரிய பாதைகள் ஒதுக்கப்பட்டது குறித்தும் சிலை பராமரிப்பு குறித்தும் அதற்கு உண்டான நபர்களிடத்தில் மேயர் அவர்கள் கேட்டறிந்தார். தொடர்ந்து சிலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு பணிகள் குறித்தும் சுகாதார ஆய்வாளர்களிடத்தில் கேட்டறிந்தார் மேலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அவர்களுக்கு கருத்து கூறினார்.குறிப்பாக தற்காலிக தடுப்பு வழிகள் அமைக்கப்பட்டுள்ள இந்த இடத்தில் காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருக்கக்கூடிய மருது சகோதரர்களின் சிலைக்கு அனைத்து கட்சி பிரமுகர்களும் பொதுமக்களும் 27ஆம் தேதி மற்றும் 30ஆம் தேதி மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ள நிலையில் அந்தப் பகுதியையும் மேயர் ஆய்வு செய்தார்.பொதுமக்கள் எளிதில் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு இறங்கக்கூடிய பகுதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறையினர் தற்காலிகமாக அமைத்து இருக்கக்கூடிய சோதனைச் சாவடி கண்காணிப்பு கேமரா மற்றும் 27 30 ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.30ம் தேதி பசும்பொன் நோக்கி செல்லும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெப்பக்குளம் பகுதியில் இருக்கக்கூடிய மருது சகோதரர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளதாக தகவல்.
Tags:    

Similar News