நீர் சேகரிப்பு கிணறுகளை ஆய்வு செய்த மேயர்
Update: 2023-11-16 06:23 GMT
கள ஆய்வில் ஈடுபட்ட மேயர், அதிகாரிகள்
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலையம் காவிரி ஆற்றில் அமைந்துள்ள புதுப்பாளையம், நீர் சேகரிப்பு கிணறு, ஆழ்துணை கிணறுகள் மற்றும் ரெங்கநாதன் பேட்டை நீர் சேகரிப்பு கிணறுகளை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மாரியப்பன், நிர்வாகப் பொறியாளர் சவடமுத்து, உதவி நிர்வாகப் பொறியாளர் கனகராஜன், உதவி பொறியாளர் விஜயபாஸ்கரன், துணை நிலநீர் வல்லுநர் இளங்கோவன், உதவி நிலநீர் வல்லுநர் மற்றும் ஒப்பந்ததாரர் டெக்கான் இண்டஸ்டிரிஸ் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.