லயன்ஸ் டவுன் பகுதியில் குடிநீர் பிரச்சனை : மேயர் ஆய்வு

தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியில் குடிநீர் முறையாக வரவில்லை என அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து மேயர் ஜெகன் பெரியசாமி அப்பகுதியை ஆய்வு செய்தார்.

Update: 2024-04-29 09:10 GMT

மேயர் ஆய்வு

தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியில் குடிநீர் முறையாக வரவில்லை என அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து மேயர் ஜெகன் பெரியசாமி அப்பகுதியை ஆய்வு செய்தார். பின்னர் அவர், புதிய வழித்தடத்தில் அந்தப் பகுதிகளில் குடிநீர் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மாநகர மக்கள் கடுமையான கோடைகாலமாக இருப்பதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது, திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.
Tags:    

Similar News