மாயூரம் வேதநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகள் தீவிரம்

முதல் தமிழ் நாவலாசிரியர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் மணிமண்டபம் ரூ.3 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. பணிகளை தமிழ் துறை மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2024-02-01 02:22 GMT

அமைச்சர் ஆய்வு 

மயிலாடுதுறையில் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில்ரூ.3 கோடி மதிப்பீட்டில் அரங்கம் கட்டப்பட்டு வருவதை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.உடன் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் , பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் .நிவேதா எம்.முருகன் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் .எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமதி.உமாமகேஸ்வரி சங்கர் , மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் .செல்வராஜ் , மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி உள்ளனர். ஒன்றிய செயலாளர் இமய நாதன், முருகமணி, இளைய பெருமாள் மற்றும் பலர் உள்ளனர்.
Tags:    

Similar News