நீட் தேர்வு எழுதாமல் எம்பிபிஎஸ் சீட்- 4 பேர் மீது வழக்கு, இருவர் கைது

திருப்பத்தூர் அருகே எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-12-22 05:23 GMT

பிலிப்ஸ் சார்லஸ், மோனிகா

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமம் குறவன் காலனியை சேர்ந்தவர் ரமேஷ், இவரது மனைவி கல்பனா இவர், ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் தனது மகளுக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக கூறி நான்கு பேர் ரூ.16 லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார் அளித்தார்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, எனது மகள் சந்தியாவை மருத்துவம் படிக்க வைப்பதற்காக நீட் பயிற்சி வகுப்பில் சேர்க்க முடிவெடுத்தேன். ஆனால் நீட் தேர்வு எழுதாமலேயே எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக ஒருவர் மூலம் அறிமுகமான பெங்களூரை சேர்ந்தவர்கள் பிலிப்ஸ் சார்லஸ், அமுது, மோனிகா மற்றும் மார்க் ஆகியோர் தன்னிடம் ஆசை வார்த்தை கூறினர். அதை உண்மை என நம்பி நேரடியாகவும், அவர்கள் வழங்கிய வங்கி கணக்கிலும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பல்வேறு தவணையாக ரூ.16 லட்சத்து 35 ஆயிரத்து 796 ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் பணம் பெற்ற பிறகு எங்களை தொடர்பு கொள்ளவில்லை மேலும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாங்கள் ஏமாற்றம் அடைந்தை உணர்ந்து தான் வழங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தேன்.

Advertisement

ஆனால் அவர்கள் இதுவரை ரூ.40 ஆயிரம் மட்டுமே திருப்பி கொடுத்துவிட்டு மீதம் பணத்தை தர மறுக்கிறார்கள் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் மோசடியில் ஈடுபட்ட பிலிப்ஸ் சார்லஸ்(43), மோனிகா(24), ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள அமுது மற்றும் மார்க் இருவரை தேடி வருகின்றனர்.நீட் தேர்வு எழுதாமல் எம்பிபிஎஸ் சீட் - 4 பேர் மீது வழக்கு, இருவர் கைது

Tags:    

Similar News