அரசுக்கு கோரிக்கை விடுத்த மதிமுகவினர்

சங்ககிரி காவல் நிலையத்தில் பட்டாசு வெடித்து கூலித் தொழிலாளி பலி மதிமுக சார்பில் நிவாரண வழங்க அரசுக்கு கோரிக்கை;

Update: 2023-12-29 03:20 GMT

நிவாரண நிதி வழங்கல்

சேலம் மாவட்டம், சங்ககிரி காவல்நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த கூலித்தொழிலாளியி மீது பட்டாசு வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அரசு நிவாரணதொகை வழங்க வேண்டுமென்று மதிமுக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் புதன்கிழமை பட்டாசு வெடித்ததில் சங்ககிரி முஸ்லீம் தெரு பகுதியைச் சேர்ந்த நியாமத்துல்லா உயிரிழந்தார். அதனையடுத்து மதிமுக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ந.மகேந்திரவர்மன், சங்ககிரி நகரச் செயலர் கதிர்வேல், நடேசன் ஆகியோர் உயிரிழந்தவரின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

Advertisement

இதனையடுத்து மதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரவர்மன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். சங்ககிரி காவல்நிலையத்தில் மர்ம பொருள் வெடித்ததில் உயிரிழந்த நியாமத்துல்லாவின் குடும்பம் ஏழ்மையான குடும்பம். இரு குழந்தைகள் உள்ளனர். அவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டு என்று அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News