அர்ஜுனாபுரம் புதூர் கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

அர்ஜுனாபுரம் புதூர் கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2023-11-30 16:39 GMT

 அர்ஜுனாபுரம் புதூர் கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை போளூர் அடுத்த சந்தவாசல் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட அர்ஜுனாபுரம் புதூர் கிராமத்தில் சுமார் 275 மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ‌மேலும் 400 கறவை பசுக்களுக்கு மலட்டு நீக்கி சிகிச்சை, 45 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், 400 (பசுக்கள் மற்றும் கிடேரி) சீனை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் 10 ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்ட நோய் புலனாய்வு உதவி இயக்குனர் டாக்டர் ராமன், கால்நடை உதவி மருத்துவர் சுகாசினி, கால்நடை ஆய்வாளர் வேலு, உதவியாளர் சிவா மற்றும் ஆவின் கூட்டறவு கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணி ,மூர்த்தி, முருகன், ஜெயசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News