திருப்பூர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகம்

திருப்பூர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகம் வருகிற 10-ம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-06 14:46 GMT

மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகள் உயிர்காக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் தேசிய கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 2024-ஆம் ஆண்டு (5-வது சுற்று) கோமாரி நோய் தடுப்பூசி வருகிற 10-ந் தேதி முதல் 21 நாட்களுக்கு அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

கிராமப்புற வளர்ச்சி, விவசாயிகளின் கூடுதல் வருவாய் கால்நடைகளை நம்பியே உள்ளது. இக்கால்நடை வளர்ப்பில் கால் மற்றும் வாய் நோய் அல்லது காணை என்றும் அழைக்கப்படும் கோமாரி நோய் வைரஸ் நச்சுயிரியால் ஏற்படுகிறது.

பொதுவாக, கலப்பின மாடுகளை, கால் மற்றும் வாய் கோமாரி நோய் அதிகம் தாக்கி, கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும். இந்நோயால், கறவை மாட்டில் பால் உற்பத்தி குறையும், சினை பிடிப்பு தடைபடும். எருதுகளின் வேலைத்திறன் குறையும்.

இளங்கன்றுகளின் இறப்பு சதவீதம் உயரும். அதனால் கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 6 மாதத்திற்கு ஒருமுறை என ஆண்டுக்கு 2 முறை இலவசமாக அனைத்து கால்நடைகளுக்கும் (பசுவினம் மற்றும் எருமையினம்) 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பாண்டு  வருகிற 10&ந் தேதி முதல் 21 நாட்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமப்புறங்கள், குக்கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும், கால்நடை நிலையங்கள் மூலமாக நடைபெறும் முகாம்களில், இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்திபயன்பெறுமாறு விவசாய பெருமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை விவசாயிகள் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News