தஞ்சாவூரில் மருத்துவ முகாம்

தஞ்சாவூரில் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு - மூத்த குடிமக்கள் நலச்சங்கம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது

Update: 2024-02-25 16:13 GMT
மருத்துவ முகாம்
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு மூத்த குடிமக்கள் நலச்சங்கம் சார்பில் தஞ்சாவூரில் நேற்று இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. மூத்த குடி மக்கள் நலச்சங்க மாவட்டத் தலைவர் தென்னை விஞ்ஞானிடாக்டர் செல்வம் தலைமை வகித்தார். தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசியச் செயலர் வழக்கறிஞர் சந்திரபோஸ் முன்னிலை வகித்தார். தேசிய கோயில்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஆதி. நெடுஞ்செழியன் வாழ்த்துரை வழங்கினார். முகாமை நேஷனல் பார்மா மருத்துவமனை டாக்டர் பராந்தகன் துவக்கி வைத்தார். முகாமில் தேசிய திருக்கோயில் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் ராஜாசுப்புரமணியன் மற்றும் கோவிந்தராஜ் மாநகரத் தலைவர் காசிராஜன், சக்திவேல், மூத்த குடிமக்கள் நலச்சங்கப் பொதுச்செயலர் பாஸ்கர், பொருளாளர் கண்டிமுத்து, செயற்குழு உறுப்பினர் சுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஜாகிர் உசேன், சிவராமன் செய்திருந்தனர்.
Tags:    

Similar News