மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் தற்கொலை

சேலம் மாவட்டம்,ஆண்டியாப்பட்டியில் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-03-28 15:45 GMT

தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுமறதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகன் சீனிவாசன் (27). சேலம் ஆட்டையாம்பட்டி அருகேயுள்ள மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். கல்லூரிக்கு எதிரே அறை எடுத்து தங்கியிருந்தார். இன்று காலை நீண்டநேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த நண்பர்கள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது, உள்ளே அவர் தூக்கில் தொங்கினார்.

உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்றனர். ஆனால் அவர் இறந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு கடிதம் ஒன்று எழுதி வைக்கப்பட்டிருந்தது. அதில் எனது சாவுக்கு குடும்பமோ, கல்லூரி நிர்வாகமோ காரணம் இல்லை' என எழுதப்பட்டிருந்தது.

தற்கொலை செய்து கொண்ட சீனிவாசன், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். திருமணமாகாத நிலையில் கடன் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News