மருத்துவ காப்பீட்டு முகாம்!
பாஜக கட்சி சார்பில் மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றிய தலைவர் தலைமை வகித்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-26 04:50 GMT
மருத்துவ காப்பீட்டு முகாம்
விராலிமலை கிழக்கு ஒன்றிய பாஜக கட்சி சார்பில் பாக்குடி ஊராட்சி வாழத்தடிப்பட்டியில் பாரத பிரதமரின் ரூபாய் ஐந்து லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு முகாம் நடந்தது. முகாமிற்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பாக்குடி சசி, வெளிநாடு வாழ் தமிழ் வளர்ச்சி பிரிவு ஒன்றிய தலைவர் சக்திவேல், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் பாக்குடி செல்வம் வாழத்தாடிபட்டி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பொது மக்களுக்கு இலவசமாக மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாக்குடி ஊராட்சி பாஜக கட்சியினர் செய்திருந்தனர்.