பண்ருட்டியில் மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு சேர்க்கை முகாம்

பண்ருட்டியில் மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு சேர்க்கை முகாம் நடைபெற்றது.

Update: 2024-03-05 11:08 GMT

முகாமில் கலந்து கொண்டவர்கள் 

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு சேர்க்கை முகாம் பண்ருட்டி கே. எஸ். ஆர் சக்கரபாணி செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இம்முகாமை பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் க. ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

உடன் அதிகாரிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்‌. இந்த முகாமில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags:    

Similar News