மாவட்ட ஆட்சியர் சந்தித்து வாழ்த்து
மாநில ஊரக பயிற்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மூலமாக ஊராட்சி கற்றல் மையமாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி தலைவர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழகத்தில் உள்ள 12525 ஊராட்சிகளில் 10 ஊராட்சிகளில் ஊராட்சி கற்றல் மையங்களாக, (Panchayat Learning Centre )மாநில ஊரக பயிற்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மூலமாக தேர்வு செய்து அதற்கான உத்தரவு ஆணையினை மாநில ஊரக உள்ளாட்சி துறை ஆணையர் சோபனா, மாநில ஊரக பயிற்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மறைமலைநகர் இயக்குனர் செல்வராஜன், மேனாள் இயக்குனர் ராமமூர்த்தி, இணைந்து வழங்கினார்கள்.
அந்த கடிதத்தை செங்கல்பட்டு மாவட்ட 4 ஊராட்சி மன்ற தலைவர்கள் வெள்ளபுத்தூர் தலைவர் திரு. வரதன், துணை தலைவர் விஜயகுமார் செயலாளர் ராஜசேகர், கோவளம் ஊராட்சி மன்ற தலைவி சோபனாதங்கம், படூர் ஊராட்சி மன்ற தலைவி தாராசுதாகர், மன்னிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவி கெஜலக்ஷ்மி சண்முகம், செயலாளர் ராமபக்தன், மற்றும் பயிற்றுனர் சிவசக்தி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் , கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் செல்வி. அனாமிக்கா மற்றும் உதவி இயக்குனர் (பஞ்சாயத்துராஜ் ) செல்வி. உமா ஆகியோர்களை சந்தித்து ஒப்பந்த கடிதத்தை காட்டி வாழ்த்து பெற்றனர்.