என்எல்சி பொது மேலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பு
என்எல்சியில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கு அதிகப்படியான உபரி நீரை வெளியேற்றுமாறு முதன்மை பொது மேலாளரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
Update: 2024-02-16 04:06 GMT
வடலூர் சுற்றுவட்டார மக்களின் குடிநீர் தேவைக்காகவும் காட்டுக்கொல்லை, பார்வதிபுரம், சேராக்குப்பம் மக்களின் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்த நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தால் வெளியேற்றப்படும் உபரிநீர் திடீரென அளவு குறைக்கப்பட்டுள்ளதால் காட்டுக்கொல்லை, பார்வதிபுரம், சேராக்குப்பம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பயிரிடப்பட்ட மணிலா உள்ளிட்ட விவசாயத்திற்கு அதிகப்படியான தேவையை கருத்தில் கொண்டு அதிகப்படியான நீரை திறந்து விடுமாறு நெய்வேலி நிலக்கரி நிறுவன முதன்மை பொது மேலாளரை வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், நகர கழக செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை கடிதம் அளித்தனர். முதன்மை பொது மேலாளர் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.