திருப்பூரில் குறிஞ்சி முன்னேற்ற பேரவை மாநிலசெயற்குழு கூட்டம் நடைபெற்றது.
முருகனுக்கு வள்ளியை பெண் கொடுத்த சமூகம் என்ற அடிப்படையில் முருகன் ஆலயத்தில் உள்ள இந்து அறநிலைத்துறையில் கமிட்டி நிர்வாகியாக நியமனம் செய்ய வேண்டும் என குறிஞ்சியர் முன்னேற்ற பேரவை மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
குறிஞ்சியர் முன்னேற்ற பேரவை மாநில செயற்குழு கூட்டம் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள தனியார் விடுதியில் மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர்.
மாநில செயற்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகர் குறிஞ்சியர் முன்னேற்ற பேரவையின் சார்பாக தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாகவும் , குறிப்பாக குறிஞ்சியர் சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் , தமிழகம் முழுவதும் பத்து லட்சத்திற்கும் மேல் உள்ள தங்கள் சமூக மக்களுக்கு சட்டமன்றத் தேர்தலிலும் , அரசு வேலை வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். முருகன் ஆலயங்களில் வள்ளிக்கு சீர் கொடுக்கும் நிகழ்வை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்க வேண்டும் ,
முருகன் கோவில்களில் உள்ள இந்த அறநிலையத்துறையில் தங்களை கமிட்டி நிர்வாகியாக நியமனம் செய்ய வேண்டும் எனவும் , முருகனுக்கு வள்ளி குறமகளை பெண் கொடுத்த ரீதியில் தங்களுக்கு அறநிலைத்துறை கமிட்டியில் பொறுப்பு வழங்குவதோடு கோவில்களில் உள்ள தங்கள் சமூக மடத்தினை மீட்டு தர வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறையில் மாநில மாவட்ட கமிட்டி உறுப்பினர்களாக வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பேட்டி அளித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் சமூக மக்களை தேடி வந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வாக்குறுதி அளிப்பவர்களுக்கு ஆதரவு தர இருப்பதாகவும் பேட்டி அளித்தார்.