திருப்பூரில் காங்கிரஸ் சார்பில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்

திருப்பூர் பார்க்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-29 14:02 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நிர்வாகிகள் மண்டல தலைவர்கள் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் சார்பு அணிகள் நிர்வாகிகள் கூட்டம் பார்க் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டவர்களுக்கு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர். முத்துக்குமார் கதர் ஆடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு பெறுவது எனவும் இளம் தலைவர் ராகுல் காந்தி நடத்திவரும் பாரத் ஜேடு நீதி பயணம் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த திருப்பூரில் உடனடியாக இஎஸ்ஐ மருத்துவமனையை செயல்பாட்டுக்கு கொண்டு வராத மத்திய அரசை கண்டித்தும்,

தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்திற்கு எந்த நிதி உதவியும் வழங்காத மத்திய அரசை கண்டித்தும் மேலும் உடனடியாக நிவாரணத் தொகை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட சார்பு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News