சேலத்தில் இந்திய குடியரசு கட்சியின் செயற்குழு கூட்டம்
சேலத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் கருமலை தலைமை தாங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட ஆலோசனை ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது;
By : King 24x7 Angel
Update: 2024-02-05 08:58 GMT
இந்திய குடியரசு கட்சியின் செயற்குழு கூட்டம்
சேலத்தில் இந்திய குடியரசு கட்சியின் (சிவராஜ்) மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் கருமலை தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கோபிநாதன், பொருளாளர் வேலுசாமி, செயல் தலைவர் சிவன், மாநில துணை செயலாளர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர்கள் தனசேகரன், ராஜி, மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் தேசிய தலைவர் ஈகைமணி, தேசிய பொருளாளர் நரேஸ் அம்பேத்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய குடியரசு கட்சி வாய்ப்பு உள்ள இடங்களில் தனித்து போட்டியிடுவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. மேலும் ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் அம்பேத்கருக்கு உலகிலேயே மிக உயரமான உருவச்சிலை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பாராட்டு தெரிவிப்பதோடு, தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் 150 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் சிலையை தமிழக அரசு அமைக்க வேண்டும். தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மக்கள் மீது தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் சாதி வன்கொடுமைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழக கவர்னரிடம் இந்திய குடியரசு கட்சி சார்பில் மனு கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.